திருமணத்தில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... ஆசையை நிறைவேற்றிய பிரபல தமிழ் நடிகர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் பிரபல திரைப்பட நடிகரான மோகன் தன்னுடைய ரசிகையின் ஆசையை நிறைவேற்றியிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது வரை இருக்கும் இளைஞர்கள் பலருக்கும் பிடித்த நடிகர் என்றால் மோகனை சொல்லலாம். மைக்கை பிடித்து அவர் பாடிய பாடல்களுக்கு, இளையராஜா உயிர் கொடுத்திருந்தாலும், மோகனுக்கு ரசிகர்கள் வைத்திருக்கும் பெயர் மைக் மோகன்.

அப்போதே பல வெள்ளி விழா படங்களில் நடித்திருந்த இவர், தற்போது படங்களில் நடிக்காமல் தொழிலை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் தீவிர ரசிகையாக 90 கிட்ஸ் பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரின் திருமணத்திற்கு தான் மோகன் சர்பிரைசாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை மாதாவாரத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் தான் வினோதினி என்ற பெண்ணிற்கு திருமணம் நடந்தது.

இது குறித்து வினோதினி கூறுகையில், நான் மோகன் சாரின் பயங்கர ரசிகை, எங்கள் வீட்டில் எங்க அப்பா அவரின் ரசிகர், ரசிகர் என்றால் பால் ஊற்றுவது, கட் அவுட் அடிப்பது எல்லாம் கிடையாது.

அவரின் பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படி தான் நானும் அவர் பாடைலை கேட்க ஆரம்பித்தேன், அவர் படங்கள் தொலைக்காட்சியில் போடுகிறார்கள் என்று தெரிந்தால், அன்றைய தினம் நான் விடுமுறை எடுத்து கூட பார்த்திருக்கிறேன்.

அந்தளவிற்கு அவரை பிடிக்கும். அப்படி இருந்த போது, தான் சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் மோகன் சாரின் பேன் கிளப் இருப்பது தெரிந்தது, அந்த பேன்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு தான், அதில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் அதிகம் இருப்பது தெரிந்தது.

ஒரு முறையாவது அவரை பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை, அதே போன்று என்னுடைய திருமணம் வந்ததால், திருமணத்திற்கு அவரை அழைக்கலாமே என்று பேன்ஸ் கிளப்பில் இருக்கும் அட்மின் கருணாகரனிடம் இதைப் பற்றி சொன்னேன்.

அவரும் சரி என்று கூறினார். ஆனால் மோகன் சார் உறுதியாக வருவார் என்பதை அவர்கள் கூறவில்லை, இதை மோகன் சார் சர்பிரைசாக இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இதனால் நான் அவர் வருவாரா? மாட்டாரா என்ற சந்தேகத்திலே இருந்தேன். ஆனால் சொன்ன நேரத்திற்கு முன்பே வந்து திருமணத்தில் கலந்து கொண்டார் என்று பூரிப்புடன் கூறினார்.

அதன் பின் இது குறித்து மோகனிடம் கேட்ட போது, நான் உண்மையாகவே சோஷியல் மீடியாவில் இல்லை, ஆனால் இப்போதும் எனக்காக ரசிகர்கள் இருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன், அதுவும் இந்த காலத்தில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்களாக இருப்பது வார்த்தையே இல்லை.

குறிப்பாக இந்த பெண், அவரின் குடும்பம் பற்றி எனக்கு தெரியாது, அவர் என்னை பார்க்க வேண்டும் திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைக்கும் போத், சர்பிரைசாக செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அதே போன்று அவர்களை நேரில் சென்று வாழ்த்தினேன், சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஆசை இருக்கிறது. அதற்காக நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி முடித்தார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்