சீமான் நடித்த திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள் - இயக்குநர் ஆவேசம்

Report Print Abisha in பொழுதுபோக்கு

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்த படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயங்குவதாக இயக்குநர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

அரசியலில் பெரும்புள்ளிகளை எதிர்க்கும், நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவம் என்ற படத்தில் நடித்துள்ளார். விவசாயம் அரசியல் பற்றி முக்கி பங்கு வகிக்கும் இந்த படத்தில் புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்து பேசிய இயக்குநர்களான,விஜய் ஆனந்த், சூரியன் ஆகியோர். படம் விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது பிரம்மிப்புடன் பார்த்த அவர்கள் படம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் அரசியல், குறித்து இதில் பெரும் கதைகளம் இடம் பெற்றுள்ளது. அரசியல் தலைவர்களுடன் பகை ஏற்படும் என்பதால் வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர். எனினும் நிச்சயம் படம் திரையிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்