கணவர் ஆரம்பிக்கும் இசைக்குழுவில் இணையும் பிரியங்கா சோப்ரா.. வெளியிட்ட புகைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் ஆரம்பிக்க உள்ள இசைக்குழுவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் திருமணம் செய்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நிக் ஜோனாஸ் புதிதாக இசைக்குழு ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க பாடகி மரியா கேரியுடன் இணைந்து நிக் ஜோனாஸ் இந்த இசைக்குழுவை தொடங்க உள்ளார். இதுதொடர்பாக பேசிய நிக் ஜோனாஸ் கூறுகையில்,

‘மரியா ஒரு இசைக்குழுவை தொடங்க விரும்பினால், அதற்காக நான் இருக்கிறேன். லண்டனில் பிரியங்கா அவருடைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். உண்மையில் வில்லா(பங்களா) ஒன்றுக்காக லண்டனில் விநியோகஸ்தர்களை பிரியங்காவுடன் சந்தித்தது எனக்கு சிறந்த தருணம்’ என தெரிவித்தார்.

மேலும் பாடகி மரியாவை சந்தித்தது குறித்து அவர் கூறுகையில், ‘மரியா இருந்த அதே உணவகத்தில் தான் தோராயமாக நாங்களும் இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவளால் (பிரியங்கா சோப்ரா) இன்றிரவு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஏனெனில் அவளுக்கு நிகழ்ச்சி இருந்தது. ஆனால் லாஸ் வேகாஸில் நாங்கள் மரியாவை பார்க்கப் போகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிக் ஜோனாஸ்-பிரியங்கா சோப்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை மரியா கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புதிய இசைக்குழுவை தொடங்கப்போகிறோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்