அவரை அழிக்காமல் விடமாட்டேன்.. என் உயிருக்கு ஆபத்து... பிரபல நடிகை ஆக்ரோஷமாக பேசி வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தெலுங்கு நடிகை சுனிதா, தன்னை தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்டதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள சினிமா வர்த்தக சபைக்கு வந்த நடிகை சுனிதா போயா அங்கிருந்த கதவில் தனது கையை சேர்த்து வைத்து இரும்பு சங்கிலியால் பூட்டி கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில் தயாரிப்பாளர் Bunny வாசு தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

அவருக்கு எதிராக போராடவே அங்கு வந்ததாகவும், தனக்கு மனநல கோளாறு கிடையாது எனவும் கூறினார்.

அவரின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொலிசார் வந்து கவுன்சிலிங் கொடுக்க சுனிதாவை அழைத்து சென்றனர்.

இந்த சூழலில் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை சுனிதா வெளியிட்டார்.

அதில், இந்த விடயத்தில் நடிகர் பவன் கல்யாணை தொடர்பு படுத்தாதீர்கள், நான் அவர் கட்சியின் ஆதரவாளர்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, வாசுவை அழிக்காமல் நான் ஓய மாட்டேன் என கூறியிருந்தார்.

இதனிடையில் வாசு, சுனிதாவுக்கு உதவ முன் வந்ததாகவும், அவருக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ய நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்