சிறை செல்ல வேண்டி வந்திருக்கும்: மகளின் மர்ம மரணம் குறித்து பிரபல பாடகி சித்ரா வெளியிட்ட கண்ணீர் தகவல்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

தென் இந்திய திரையுலகின் நட்சத்திர பாடகியாக வலம் வந்த சித்ரா, பல ஆண்டுகள் காத்திருந்து பெற்றெடுத்த தமது மகளின் மர்ம மரணம் தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் பிறப்பிலும் வாழ்க்கையிலும் மரணத்திலும் கடவுளின் ஸ்பரிசம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புட்டர்பர்த்தியில் உள்ள சத்தியசாயிபாபாவிடம் தமது பிள்ளையில்லாத வாழ்க்கை தொடர்பில் கவலையை பகிர்ந்து கொண்டபோது,

அடுத்தமுறை இங்கு வரும்போது பிள்ளையுடன் வருவாய் என்ற ஆசியை அவர் வழங்கியதையும், பின்னர் அது நடந்தேறியது எனவும் சித்ரா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு உயிர் பூமியில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய உச்ச நேரத்தில் தமது மகளின் மரணம் நேர்ந்துள்ளதாகவும் சித்ரா நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் கிருஷ்ணரின் மறைவு நேர்ந்த அதே நாளிலும், ஜலசமாதியாகவும் தமது மகளின் மரணம் ஏற்பட்டுள்ளது என்கிறார் சித்ரா.

தாம் பாடிய பாடல்களில் மஞ்சாடி என்ற தனியார் பாடல் தொகுப்பு தமது மகளுக்கு கொள்ளை பிரியம் என கூறும் சித்ரா,

அந்த பாடல்களை அவர் காணொளியாக பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று துபாயில் உள்ள ஹொட்டலில், தமது மகள் மஞ்சாடி பாடல்களின் காணொளி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுகொண்டே தாம் குளிக்க சென்றதாக கூறும் சித்ரா,

அந்த வேளையில் சிறுமி நந்தனா ஏன் நீச்சல் குளம் குறித்து சிந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பும் பாடகி சித்ரா,

தமது மகள் தம்முடன் எப்போதும் ஒரு பொம்மை வைத்திருப்பதாகவும், அன்று அந்த பொம்மை அவரிடம் இல்லை எனவும்,

எப்போதும் காலணியுடன் இருக்கும் தமது மகள் ஏன் அன்று அதை மறுத்தார் என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது என்றார்.

மட்டுமின்றி அந்த குடியிருப்பின் கதவுகளை திறந்து சிறுமி நந்தனாவால் எப்படி வெளியேற முடிந்தது?

அந்த நீச்சல் குளத்தின் இரும்பு கதவை சிறுமியால் எப்படி திறக்க முடிந்தது உள்ளிட்ட பல கேட்விகளுக்கு இன்னமும் தமக்கு விடை இல்லை என்கிறார் அவர்.

தகவல் அறிந்து பொலிசார் வந்து விசாரணை மேற்கொண்ட போது, நீச்சல் குளத்தின் அருகாமையில் வரை, தமது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும்,

பொலிசார் வந்து அதை பதிவு செய்த தாகவும், இல்லை எனில் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிசாரும் சிறப்பு அதிகாரிகளும் அந்த கால் அடையாளங்களை வீடியோவாக பதிவு செய்த பின்னர் அந்த அடையாளங்கள் மாயமானதாகவும் சித்ரா நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்