பிரபல நடிகர் பிரசாந்த் நாராயணன் மனைவியுடன் அதிரடி கைது! வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் பிரசாந்த் நாராயணன் மற்றும் அவர் மனைவியை பொலிசார் பண மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.

தமிழில் வெளியான நெடுஞ்சாலை, நான் தான் சிவா போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் பிரசாந்த் நாராயணன்.

இவர் ஏராளமான இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் கடந்த 2017ம் ஆண்டு ஒரு சினிமாக்காரன் என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை தாமஸ் பணிக்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளருக்கும், பிரசாந்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பிரசாந்த் மும்பையில் தான் மாமனாருடன் இணைந்து பல தொழில்களை நடத்தி வருவதாகவும், நீங்கள் பண முதலீடு செய்தால் எங்கள் நிறுவனங்களுக்கு உங்களை இயக்குனர் ஆக்குகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய தாமஸ் பணிக்கர், பிரசாந்த் மற்றும் அவரது மனைவி சோனாவிடம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பிரசாந்த் கொடுத்த வாக்குப்படி எதையும் செய்யவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதனால் தாமஸ் கேரள குற்றப்பிரிவு பொலிசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி சோனாவை கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் வருகிற 20ந் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers