15 ஆம் வயதில் பலாத்காரத்திற்கு இரை... கருச்சிதைவு: மனந்திறக்கும் பிரபல நடிகை

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

ஹாலிவுட்டில் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திரை ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை டெமி மூர் முதன்முறையாக தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை புத்தகமாக வெளியிட உள்ளார்.

தற்போது 56 வயதாகும் டெமி மூர் தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை Inside Out என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் அதிரவைக்கும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆம் வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான சம்பவம் தொடர்பில் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி தம்மைவிட 15 வயது குறைவான Ashton Kutcher என்ற நடிகரை மணந்து கொண்டதும், அவருடனான உறவில் ஏற்பட்ட கருச்சிதைவு தொடர்பிலும் டெமி மூர் அந்த புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், அந்த பிள்ளையின் மரணத்திற்கு பின்னரே தாம் மதுவுக்கும் போதை மருந்துக்கும் அடிமையானதாகவும் டெமி மூர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிள்ளையின் மரணத்திற்கு முக்கிய காரணமே தாம் தான் என கூறும் டெமி மூர், பின்னர் அந்த நினைவுகளில் இருந்து தம்மால் விடுபட முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உடல் ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாகவும் தமது மூன்று மக்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் டெமி மூர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்ற தாயாரை தமது சிறுவயதில் காப்பாற்றியதாக கூறும் டெமி மூர்,

தாயாரின் வாயில் இருந்து பிஞ்சு விரல்களால் தூக்க மாத்திரைகளை வெளியே எடுத்ததாகவும், அந்த நினைவுகள் தம்மை இப்போதும் வேட்டையாடி வருவதாகவும் டெமு மூர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு 13 வயதில், அதுவரை தாம் அப்பா என அழைத்துவந்த நபர் தமது சொந்த தந்தை அல்ல என தெரிய வந்ததும் அவர் பதிவு செய்துள்ளார்.

மொடலாக வாழ்க்கையை தொடங்கி பின்னர் திரை உலகில் மிக அதிக ஊதியம் பெறும் உட்ச நட்சத்திரமாக வலம் வந்த டெமி மூர் முதலில் பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரண்டாவதாக ப்ரூஸ் வில்லிஸ் என்ற பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். வில்லிஸுடன் திருமண முறிவுக்கு பின்னர் நீண்ட 5 ஆண்டுகள் கடந்த பின்னர் தம்மைவிடவும் 15 வயது குறைவான Ashton Kutcher என்ற நடிகரை டெமி மூர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்ட டெமி மூர் தற்போது தமது மகள் ஒருவருடன் தனியாக குடியிருந்து வருகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers