மயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சென்னையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நடிகை ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை ஒருவர் சீரழித்ததாக புகார் அளித்துள்ளார்.

வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வரும் பெண் நேற்றிரவு காவல் நிலையத்துக்கு வந்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அவரை மீட்ட பொலிசார் விசாரணை நடத்தியதில் அப்பெண் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் துணை நடிகை என தெரிந்தது.

அவர் கூறுகையில், எனக்கு பக்ரூதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறினார்.

மேலும் அது தொடர்பான ஆபாச வீடியோவை எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். இதோடு எனது தாயாரை கொன்று விடுவதாகவும் பக்ரூதீன் மிரட்டுவதாக கூறினார்.

இது தொடர்பான பொலிசார் விசாரணையில் பக்ரூதீனுக்கும் நடிகைக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததும் தெரியவந்துள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்