அம்மாவிற்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த கவின் செய்த அதிரடி செயல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாயை பிக்பாஸ் கவின் ஜாமீனில் மீட்டுள்ளார்.

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் தமயந்தி. இவரும், இவருடைய கணவர் அருணகிரி, மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி உள்ளிட்டோர் 1998-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை முறையான அனுமதியின்றி ஒரு சீட்டு கம்பெனியை நடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் நடத்திய நிறுவனத்தில் 34 நபர்கள் பணம் கட்டியுள்ளனர். ஆனால் இவர்கள் யாருக்கும், சீட்டு கம்பெனி நடத்தி வந்த தமயந்தி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 2007-ம் ஆண்டு திருச்சி பொருளாதர குற்றவியல் பிரிவில் புகார் கொடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் சீட்டு கம்பெனி நடத்தியவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் தமயந்தி, ராஜலட்சுமி உள்ளிட அனைவருக்கும் மோசடி வழக்கில் ஐந்து ஆண்டு சிறையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோசடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகிய இருவரும் மரணமடைந்துவிட்டதால், தமயந்தி, ராஜலட்சுமி உள்ளிட்டவர்களை கடந்த ஆகஸ்ட் 29-ம் திகதி பொலிசார் கைது செய்தனர்.

இதில் ராஜலட்சுமி என்பவர் நடிகர் மற்றும் பிக்பாஸில் கலந்து கொண்ட கவினின் தாய் ஆவார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். இதனால் கவினின் தாய் கைது செய்யப்பட்ட விவரம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள கவின், தன்னுடைய தாய் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவர்களை ஜாமீனில் எடுக்கும் வேலைகளில் இறங்கினார். இதையடுத்து தற்போது ராஜலட்சுமி, தமயந்தி உள்ளிட்டோரை கவின் ஜாமீனில் எடுத்துள்ளார்.

மேலும் சீட்டு கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக கவின் உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers