பிரபல திரைப்பட எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

தஞ்சாவூரில் பிறந்து சேலத்தில் வசித்தவர் மகரிஷி (87) என்கிற பால சுப்பிரமணியம். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தில் பணியாற்றினார்.

நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும்.

இதன் கதை 1965 இல் "என்னதான் முடிவு" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது மற்ற கதைகள் பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்தன.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த மகரிஷி இன்று இயற்கை எய்தியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்