‘ஷோலே’ பட புகழ் நடிகர் மரணம்! திரையுலகம் கண்ணீர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹிந்தி நடிகர் விஜு கோடே உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஷோலே’. அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த இந்தப் படத்தில், காலியா என்ற பாத்திரத்தில் நடித்தவர் விஜு கோடே(77).

இவரது நடிப்பும், வசனமும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்தாஸ் அப்னா அப்னா படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கடந்த 1964ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான விஜு கோடே, சுமார் 300 படங்களுக்கு மேல் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அமிதாப் பச்சன், சஞ்சய் தத், அனில் கபூர், அமீர்கான், அக்‌ஷய் குமார் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள விஜு கோடே, கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளியான Jaane Kyun De Yaaron என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தி படங்களைத் தவிர்த்து பல மராத்தி மொழி படங்கள் மற்றும் நாடகங்களிலும் நடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று விஜு கோடே காலமானார். அவரது மறைவுக்கு ஹிந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்