பிக்பாஸ் வீட்டில் நான் செய்த தவறு... எதற்காக சென்றேன்? முதல் முறையாக உருக்கமாக கூறிய கவீன்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸை விட்டு வெளியேறியுள்ள சர்ச்சைக்கு பெயர் போன கவீன் முதல் முறையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது நூறு நாட்களை நெருங்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் கவீன் போட்டியிலிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இது சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இவர் லாஸ்லியாவை காதலிப்பதாகவும், இவர் அனுபாதபத்தை சம்பாதித்து பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறுவதற்காக இப்படி செய்கிறார் என்று மிகவும் மோசமாக கவீனை இணையவாசிகள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் வெளியே வந்த கவீன் முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, நான் நிகழ்ச்சி முடிந்த பின்பு சில விஷயங்களை கூறலாம் என்று நினைத்தேன்.

ஆனால் தற்போது சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் இந்த விஷயத்தை நான் புரிய வைக்க வேண்டும். நான் ஏன் இந்த ஷோவுக்கு சென்றேன் என்றால், நான் எடுத்து வந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இதனால் தனக்கு எதாவது வேண்டும் என்று நினைத்தேன், அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணம் என்னுடைய தற்போதைய குடும்ப சூழ்நிலைக்கு உதவும் என்று சென்றேன்.

இப்போது எனக்கு கிடைத்திருக்கும் புகழை என்னால் கொண்டாட முடியவில்லை, என்னை சுற்றி இப்போது அவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது.

நீங்கள் கொடுக்கும் அன்பை கூட என்னால் சரியாக ஏற்று கொள்ள முடியவில்லை, இப்போதைக்கு நான் என்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும், இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை நீங்கள் நினைக்க வேண்டும்.

எனக்கும் இது ரியாலிட்டி ஷோ என்பதை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆனது, ஏனெனில் நான் பிக்பாஸ் வீட்டில் பாசிட்டிவ்வாக சென்றேன், ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அது வேறு மாதிரி சென்றுவிட்டது என்பதை நினைத்து தான் இது ஒரு கேம் ஷோ என்பதை உணர்ந்தேன். இதை எல்லாம் நான் செய்த தவறு எல்லாம் சரி என்பதற்காக சொல்லவில்லை, நான் செய்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், ஒரு வேளை உங்கள் யாரவையாவது நான் செய்த விஷயங்கள் துன்புறுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.

எப்போவும் போல் எல்லோரும் ஒன்றாக இருப்போம், சந்தோஷமாக இருப்போம் என்று உணர்ச்சி மிகு வார்த்தையால் முடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்