பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிப் போட்டியை பார்க்க போகமாட்டேன்! சாண்டி முன்னாள் மனைவி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியை நான் பார்க்க போகவில்லை என்று சாண்டியின் முன்னாள் மனைவி உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் , 15 பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்று வருகிறது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை இந்த பிக்பாஸ் சீசன் 3-யின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த டைட்டில் வின்னர் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த முகன் ராவ், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் உள்ளனர். ஒரு சிலர் எதிர்பார்தவிதமாக ஷெரீனுக்கு கூட கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே, சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி சாண்டிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவருக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது என்பது தெரிந்தும், இவர் இப்படி செய்வது நல்லது கிடையாது, இவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று பலர் கூறினர். ஆனால் காஜல் பசுபதியோ அதெல்லாம் இல்லாமல் தொடர்ந்து டுவிட்டரில் தன்னுடைய கருத்தை தெரிவித்து வந்தார்.

இதையடுத்து காஜல் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சாண்டியின் குழந்தைக்காக நான் இறுதிப் போடியை பார்க்க போகவில்லை என்று வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும் நீங்கள் ஏன் போகாமல் இருக்க வேண்டும், இது ஒரு நிகழ்ச்சி யார் வேண்டும் என்றாலும் சென்று பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்