வெளிநாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பிக்பாஸ் வெற்றியாளராக முகன் மாறியது எப்படி?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் தமிழ் சீசன் 3-யின் வெற்றியாளரான முகன் ராவ் கடந்து வந்த பாதை, அவருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட 15 பிரபலங்களில், மலேசியாவைச் சேர்ந்த பாடகரான முகன் ராவும் ஒருவர், இவருக்கு மலேசியாவில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் இவர் எப்படி இந்த பிக்பாஸ் சீசனில் வெற்றி பெற போகிறார் என்று நினைத்த போது, நியாயமாக, உணர்வுபூர்வமாக, மதிப்பு கொடுத்து விளையாடினால் யார் வேண்டும் என்றாலும், எந்த போட்டியிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு முகன் இப்போது உதாரணமாக மாறியிருக்கிறார்,

மலேசியாவில் மலேசியாவில் காவல்துறைப் பணியில் இருந்திருக்க வேண்டிய முகன் ராவ், இப்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறியதன் மூலம், உலகம் அறியும் நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இவருடைய பாடலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் 3-யின் துவக்கத்தில் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்த முகன், ஒரு கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் இழுத்தார்.

நேர்மையாக விளையாடும் நபர் என்று நடிகர் கமல்ஹாசனே பல முறை இவரை பாராட்டியிருக்கிறார். குறிப்பாக பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று, அதோடு டைட்டில் வென்ற முதல் நபரும் முகன் தான், முதல் சீசனில் பாடலாசிரியர் சினேகனும், இரண்டாவது சீசனில் ஜனனியும், இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றனர்.

ஆனால் அவர்கள் டைட்டில் ஜெயிக்கவில்லை. அபிராமியுடன் இருந்த நட்பு, தர்ஷனுடன் இருந்த நட்பு, கலைபொருட்கள் செய்வது, பாடல்கள் பாடுவது, என யாராலும் வெறுக்க முடியாத நபராக மாறினார் முகன்.

இப்படி இன்று பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த முகன் ராவ், ஒரு காவல் துறை அதிகாரியாக மாற வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசை, ஆனால் முகனுக்கோ இசையில் நாட்டம்.

இதை சிறு வயதில் இருந்தே முகன் ராவ் வெளிப்படுத்தி வர, அவரின் தந்தை பிரகாஷ் ராவ் நல்ல பாடகர் என்பதால் முகனுக்கு இசை மீது நாட்டம் ஏற்பட்டதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை, தன்னுடைய 13 வயதிலே முகன் சொந்தமாக பாடலை எழுத ஆரம்பித்திருக்கிறார்.

நள்ளிரவு வரை பாடல்களை எழுதும் முகன், இடையில் அப்பாவை எழுப்பி பாடல்களை பாடி காண்பிப்பாராம், அப்போது அவர் பாடல்கள் கேட்கும் போது அருமையாக இருக்கிறது என்று தட்டி கொடுப்பாராம்.

இப்படி தான் முகன் பாடல்களை எழுது பாட ஆரம்பித்திருக்கிறார். அப்புறம் எப்படி முகன் மலேசியாவில் பிரலமானார் என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கும், மலேசியாவை பொருத்தவரை உள்ளூர் மக்கள் பிரபலமாக வேண்டும் என்றால், அவர்கள் அங்கிருக்கும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள் மற்றும் மேடை போன்றவை ஏறியிருக்க வேண்டும்.

இதன் மூலமாகவே மலேசியாவில் இருப்பவர்கள் பிரபலமாகி வருகின்றனர். இது தான் அவர்களின் ஆரம்ப படி என்றே கூறலாம்.

ஆனால் முகன் இதிலிருந்து சற்று விலகி, தன்னை சுயமாக காண்பித்து கொண்டார் முகின், தனியாகத் தான் பாடிய பாட்லகள், சில சுவாரஸ்யமான தகவல்கள் போன்றவைகளை முகன் தன்னுடைய யூ டியூப் சேனலில் போட ஆரம்பித்திருக்கிறார்.

இது இளைஞர்களுக்கு பிடித்து போக, அப்படிய கொஞ்சம் கொஞ்சமாக முகனுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது, அவருடைய பாடல்களை முனுமுனுக்காத மலேசிய தமிழ் இளைஞர்கள் இல்லை என்றே கூறலாம்.

இவருடைய பாப் பாடல்கள் எல்லாமே துள்ளல் ரகம், தான் குறிப்பாக முகனுக்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகமாம், இப்போது பிக்பாஸ் டைட்டில் வெற்றிக்கும், முகனுக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ, ஆனால் மலேசியாவில் அவர் குறைந்தபட்சம் மூன்று படத்திலாவது கமிட் ஆகிவிடுவார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர் கூறியுள்ளார்,

சிறுவயதிலே முகன் பல துன்பங்களை பார்த்துள்ளார், இவரின் இளம் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்ல முடியாது, ஆரம்பத்தில் இவரின் குடும்பம் சற்று ஏழ்மையான நிலையில் இருந்தபடியால், தனது பல திருப்பங்களை அவர் சுருக்கி கொண்டதாகவும், பெற்றோரை சிரமப்படுத்த கூடாது என்பதற்காக தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பாராம் முகன்.

பொது இடங்களுக்கு செல்லும் போது, குளிர்பான டின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்தால், அவற்றை சேகரித்து பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை தன்னுடைய செலவு வைத்து கொள்வாராம்.

இப்படி பல கஷ்டங்களை சந்தித்து, இப்போது பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியிருக்கிறார் முகன்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்