தரக்குறைவாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் கவீன்... வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கவீனை பலரும் திட்டிய நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15-க்கும் மேற்பட்ட பிரபலங்களில் நடிகர் கவீனும் ஒருவர். இவர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போது நான் சில வெற்றிகளை கண்டுவிட்டேன், இந்த வீட்டிற்குள் வந்திருக்கும் இலங்கையை சேர்ந்த தர்ஷன், லாஸ்லியா மற்றும் மலேசியாவை சேர்ந்த முகன் ஆகியோர் கடும் கஷ்டங்களை சந்தித்துள்ளனர்.

இதனால் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும், எனக்கு எல்லாம் இதில் வெற்றி தேவையில்லை என்று கூறினார். ஆனால் இந்த நிகழ்ச்சியை கண்ட இணையவாசிகள் பலரும், இது எல்லாம் வெற்றிக்காக செய்யும், ஒரு வித யுக்தி நடிக்காதே என்று பலரும் அவரை திட்டினர்.

அதுமட்டுமின்றி இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவருடைய அம்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைப் பற்றி கவீன் குடும்பத்தை பற்றியும் எல்லாம் இழிவாக, மிகவும் தரக்குறைவாக பேசினர்.

View this post on Instagram

:)

A post shared by Kavin M (@kavin.0431) on

இதெல்லாம் தெரியாமல் இருந்த கவீன், திடீரென்று பிக்பாஸ் வீட்டில் ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் எனக்கு போதும் என்று எடுத்து கொண்டு வெளியில் வந்துவிட்டார்.

வெளியில் வந்தவுடனே அவர் தன் தாயாரை அந்த வழக்கில் இருந்து மீட்டதாக செய்தி வெளியாகின. இதையடுத்து கவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் கவீனை பாராட்டி வருகின்றனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இதே பிக்பாஸ் வீட்டில் இருந்த வனிதா விஜயகுமார் கூட கவீனை மிகவும் மோசமாக பேசினார், கவீன் அவர் அம்மாவை வெளியில் அழைத்து வந்ததை அறிந்து பாராட்டி, டுவிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்