லண்டன் இளைஞருடன் காதலை முறித்து கொண்டது ஏன்? முதல் முறையாக விளக்கமளித்த நடிகை சுருதிஹாசன்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

லண்டன் இளைஞருடனான காதல் முறிவு குறித்து முதல்முறையாக நடிகை சுருதிஹாசன் விளக்கமளித்துள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் பிரபல நடிகையாகவும் உள்ளார். இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தந்தையிடமும், மும்பைக்கு சென்று தாய் சரிகாவிடமும் அறிமுகப்படுத்தினார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சுருதிஹாசன் பதிவிட்டார். இதுபோல் மைக்கேலும் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் என்று பதிவிட்டார்.

காதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் வெளிப்படையாக பேசவில்லை. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுருதிஹாசனிடம் காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது, காதலுக்கு இதுதான் விதி என்று எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

அதே மனிதர்கள் சில நேரங்களில் தவறானவர்களாகவும் இருக்கின்றனர். காதல் முறிவினால் எனக்கு எந்த வேதனையும் இல்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அடுத்து ஒரு சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன், அது கிடைக்கும்போது மகிழ்ச்சியாக அறிவிப்பேன்.

முன்பு நான் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தேன். ஒரு காலத்தில் நான் விஸ்கி அதிகமாக குடிப்பேன். இப்போது அப்படி இல்லை.

இதை எல்லோரிடமும் இருந்தும் மறைத்துவிட்டேன். தற்போது மொத்தமாக இதை நிறுத்திவிட்டேன். என்னுடைய உடல் நிலை இதனால் மோசமாக பாதிக்கப்பட்டது.

அதனால் இந்த போதை அடிமை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை எடுத்து சரியாக முயற்சி செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்