லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் மொழி தான் எனக்கு உயிர்! நெகிழும் பிரபல நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

லண்டனில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என நடிகர் டிஜே அருணாச்சலம் கூறியுள்ளார்.

அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ள நடிகர் டிஜே அருணாச்சலம். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் அனைவராலும் கவனிக்கப்படும் வகையில் நடித்திருக்கிறார்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் தான்.

ஆனாலும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராக இவர் உள்ளார்.

அருணாச்சலம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே லண்டனாக இருந்தாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது தாய்மொழியான தமிழுக்கு தான்.

எனக்கு தமிழ் தான் உயிர் என்பதில் மாற்று கருத்தில்லை. நான் அசுரன் படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான்.

நடிகை ஆண்ட்ரியா மூலம் தான் வெற்றிமாறன் எனக்கு அறிமுகமானார்.

ஒரு வருடத்துக்கு முன்னால் நானும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து பாட்டு பாடியுள்ளோம்.

ஆண்ட்ரியா எனக்கு ஒரு நல்ல தோழி மட்டும் கிடையாது. அதுக்கும் மேலே ஒரு அம்மா மாதிரி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்