ரசிகர்களை எத்தனை நாள் ஏமாற்ற முடியும்... சாயம் வெளுக்கும்! நடிகர் விஜய் பற்றி உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் இயக்குனர் சாமி, நடிகர் விஜயை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் திரைப்பிரபலங்களில் ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் அரசியலுக்கு வந்தால், ஏதேனும் மாற்றம் நிகழும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிந்து சமவெளி, மிருகம், கங்காரு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சாமி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், இவர் நடிகர் விஜய் ரசிகரை புறம் சந்தித்துவிட்டு, மறுபுறம் தன்னுடைய கையை டெட்டால் ஊற்றி கழுபுபவர் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சாமி

தொடர்ந்து கூறுகையில், விஜய் சார், நாம் 4 முறை சந்தித்துள்ளோம். அதில், 3 முறை வீட்டில், 2000-ஆம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து அன்றில் பறவைகள் என்ற குடும்ப பாங்கான கதையைக் கூறினேன்.

இந்த கதையை நான் பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது கூறினேன், எனக்காக 2 மணி நேரம் நீங்கள் நேரம் ஒதுக்கி பேசினீர்கள்.

நான் அதைப் பற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை, சினிமாவில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும், ஆனால் நீங்கள் சமீபத்தில் பிகில் ஆடியோ இசை வெளியிட்டு விழாவின் போது பேசியதை பற்றி தான் இப்போது பேசுகிறேன்.

Credit SunTv

அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் சினிமாத்துறை தாண்டி எந்த அளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்திருக்கிறேன்.

நீங்கள் எந்தவிதத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய் பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்.

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரின் சாயம் வெளுக்கும் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்