காதல் மனைவியை பிரிந்துள்ள பிரபல நடிகர் மஞ்சு மனோஜ் அது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் இவர் பிரனதி ரெட்டி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2015-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே பிரச்னை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தானும், பிரனதியும் விவாகரத்து பெற்றுள்ளதாக மஞ்சு மனோஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த உருக்கமான பதிவில், என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா தொழில் குறித்து சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். அழகாக நேசித்த ஒரு உறவு முடிந்துவிட்டது. எங்களுக்கு இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, நிறைய வலிகளை அனுபவித்து, அதன் பிறகே பிரிவது என்று முடிவு செய்தோம்.
என் மனம் வேதனையில் இருந்ததால் என்னால் நடிக்கவோ, வேலையில் கவனம் செலுத்தவோ முடியாமல் இருந்தது.
என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இந்த புயலை தாக்குப்பிடித்திருக்க முடியாது. நான் கஷ்டப்பட்ட நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தற்போது நான் எனக்கு தெரிந்த, மிகவும் பிடித்த விடயமான படங்களில் நடிப்பதை தொடரப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
wanted to share this with u guys since long... Finalllly Here i go 🙏🏻 #Destiny I guess ... pic.twitter.com/G5UxygNTfB
— MM*🙏🏻❤️ (@HeroManoj1) October 17, 2019