நடிகர் விஜயகாந்தின் நிலையை பார்த்து கண்கலங்கிட்டேன்... எப்படி இருந்தார் தெரியுமா? பிரபல நடிகர் வேதனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான மனோபாலா, கம்பீராமாக இருந்த விஜயகாந்தை நான் ஒரு நிகழ்ச்சியில் அப்படி பார்த்த போது கண்கலங்கிவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த், தான் சினிமாவில் இருந்த போது பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால், அவர்கள் தற்போது முன்னணி இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விஜயகாந்த் தன் வீட்டிற்கு ரசிகர்கள் வந்தால் மட்டுமின்றி, துணை இயக்குனர்கள், இயக்குனர்கள் என யார் வந்தாலும், அவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்பமாட்டார் என்று கேள்விபட்டிருப்போம்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான மனோபாலா விஜயகாந்தைப் பற்றி ஒரு சில விஷயங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், இலங்கையில் அவ்வளவு மக்கள் கொல்லப்படுகின்றனர். அந்த செய்தியை கேட்டு விஜயகாந்த்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் அவரின் பிறந்தநாளும் வருகிறது. அப்போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என்று அறிவிக்கிறார். அங்கு எப்போது அமைதி நிலவுமோ அப்போது தான் பிறந்தநாள், அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஒரு மாதிரி, சோகத்திலே உட்கார்ந்து இருக்கிறார்.

எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது அவருடைய மனைவி பிரேமலதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். மருத்துவமனையில் இருக்கிறார்.

அவருக்கு மகன் பிறந்துவிட்டார் என்று அறிந்தவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல் பிரபாகரன் என்று தான் பெயர் வைத்தார், அந்தளவிற்கு அவர் அங்கிருந்த தமிழ் மக்கள் மீது உயிரையே வைத்திருந்தார்.

அதன் பின் அவர் எத்தனையோ வருடங்கள், போர் உச்சத்தில் இருக்கும் போது வரை கொண்டாடவில்லை. கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சியில் எப்போதுமே ஒரு தலைவரின் பிறந்தநாள் அந்தளவிற்கு கொண்டாடப்படும், ஆனால் அவர் அப்போதும் கொண்டாடவில்லை.

அப்படி ஆக்ரோஷமாக, ஒரு கம்பீரமாக பார்த்த அந்த மனிதனை இப்போது பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. அவருடைய அந்த கனீர் குரல் எங்கே போனது என்று தெரியவில்லை? ரசிகர்கள் அனைவருக்கும் அவரை ஒரு நடிகனாக தெரியும்.

எனக்கு விஜயகாந்த் நெருங்கிய நண்பர், உடல்நிலை சரியில்லால் இருந்த நேரத்தில் அவரை மூன்று முறை சந்தித்துள்ளேன். குறிப்பாக அவர் திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அங்கு ஏரளமான திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இருந்தனர். விஜயகாந்தை நான் அரசியல் ரீதியாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் அங்கு சென்று அவரை பார்த்த போது, என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்படிய் ஒரு மாதிரி என்னை பார்க்கிறார். அதாவது ஒரு குழந்தை நம்மை எப்படி பார்க்கும்? அது போன்று பார்க்கிறார்.

அப்போது அருகே இருந்த மனைவி பிரேமலதா என்னைப் பற்றி கூறியவுடன், கையை பிடித்துக் கொண்டார். அந்த மேடையில் நான் சத்யராஜ், செல்வமணி போன்றோர் இருப்பதை பார்த்தவுடன், பழைய ஞபாகங்கள் எல்லாம் அவருக்கு நியாபகம் வந்து ஒரே மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டார்.

எல்லோரையும் சாப்பிட வைத்து பார்ப்பதில் விஜயகாந்த் போன்று யாரும் இருக்க முடியாது, சும்மா சொல்லலாம் நானும் நூறு பேருக்கு சாப்பாடு போட்டேன் என்று, ஆயிரம் ஆயிரமாய், லட்சக்கணக்கான மக்களுக்கு சாப்பாடு போட்டவர் யார் என்றால் நான் கண்டிப்பாக விஜயகாந்த்தை சொல்வேன்.

திரையுலகில் இப்போது நிறைய பேர் உயிரோடு இருப்பதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் என்று நான் கூறுவேன். அவர் பழைய கம்பீர நடையில் அந்த குரலில் எப்போது பேசுவார் என்று காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்று கூறி முடித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்