அறிவுரை கூறிய ரஜினி.... சௌந்தர்யா முதல் கணவரை பிரிந்ததற்கு என்ன காரணம்?

Report Print Abisha in பொழுதுபோக்கு

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்துக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இளையமகளான சௌந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென தனது காதல் கணவரை சௌந்தர்யா விவாகரத்து செய்துவிட்டார். மகனை தன்னுடன் வளர்த்து வந்த செளந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகரின் மகனுமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

சௌந்தர்யா தனது முன்னாள் கணவரை பிரிந்ததற்கு காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவரை பிரிய அவரது கோபம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகமாக கோபப்படும் குணம் கொண்ட சௌந்தர்யா, திருமணத்திற்கு பிறகும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என தெரிகிறது. சௌந்தர்யாவின் இந்த குணம், கணவர் அஷ்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

இதுதொடர்பாக ரஜினி எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே இருவரும் விவகாரத்து பெற்று கொண்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்