கமல்ஹாசன் பிறந்தநாளில் அவர் குடும்பத்தாருடன் இந்த பெண் இருப்பது சரியா? சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கமல்ஹாசனின் குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருந்த புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருப்பது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையடுத்து தனது சொந்த ஊரான பரமகுடியில் தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கமல்ஹாசனின் மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

அதாவது கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷ்ரா, அண்ணன் சாருஹாசன், இவரின் மகளும், நடிகையுமான சுஹாசினி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்தித்தது மகிழ்ச்சியை தந்துள்ளது.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தில் நடிகை பூஜா குமாரும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா குமார் எப்போது கமல் குடும்ப உறுப்பினர் ஆனார் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கமல்ஹாசன் இரு முறை திருமணம் செய்து இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்தார், பின்னர் கமல்ஹாசன் - நடிகை கெளதமி ஆகியோர் 13 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த நிலையில் கடந்த 2016-ல் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்