உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகரும் தேமுகதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல், காணப்பட்ட நிலையில், சமீபத்தில் கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில், அவரை பழைய விஜயகாந்த் போன்று பேசியதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

திரைப்பட நடிகராக இருந்து, அதன் பின் தேமுதிக என்ற கட்சியை துவங்கிய போது நடிகர் விஜயகாந்தின் பேச்சால், அவருடைய கட்சி எதிர்கட்சியாக உருவெடுத்தது.

இதனால் திமுக, அதிமுக-விக்கு பின் தேமுதிக தான் விஜயகாந்த் அடுத்த முதலமைச்சர் என்றெல்லாம் சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

வந்த வேகத்தில் எந்தளவிற்கு தேமுதிக கட்சி அசுர வளர்ச்சி அடைந்ததோ, விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போன பின்பு, வீழ்ச்சிய துவங்கியது.

கடந்த இரு ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் நண்பர் வீட்டில் தங்கியிருந்து எடுத்து வந்தார்.

அதன் பின் பொது இடங்களில் விஜயகாந்த் தென்பட்டாலும், அவரை கை தாங்கலாகவே அழைத்து வர இருந்தது. இதனால் பழைய விஜயகாந்தை காணோம் என்றெல்லாம் தேமுதிக கட்சி தொண்டர்கள் வேதனையடைந்தனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட தே.மு.தி.க சார்பாக, பிரேமலதாவே பெரும்பாலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் ஒரு சில இடங்களில் மட்டுமே பேசினார்.

தலைவர் பழைய விஜயகாந்த் போன்று வர வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தே.மு.தி.க மாவட்ட தலைமைக்கழகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது, விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் முகத்தில் புதுப் பொலிவு இருந்தது.

இதனால் விஜயகாந்த் முன்பு எப்படி இருப்பாரோ அதே போன்று பார்த்ததாக கூறி, கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமடைந்தனர்.

கூட்டத்திற்கு பின் பேசிய மனைவி பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தலைவர் சூப்பராக இருக்கிறார், விரைவில் அவரை நீங்கள் கம்பீரமான நடையுடன், பழைய பேசு போன்றவைகளை பார்ப்பீர்கள் என்று கூறி முடித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்