நடிகர் சங்கம்: நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

Report Print Abisha in பொழுதுபோக்கு
168Shares

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி.கீதா என்பவர் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிராக நீதிபதி ஆதிகேசவலு முன்பு, நடிகர் விஷால் தரப்பு இன்று காலை முறையிட்டது.

3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது என விஷால் தரப்பில் வழக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென விஷால் தரப்பு கோரியது.

இது தொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது.

அதற்கு நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் இந்த வழக்கையும் பட்டியலிடும் பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்