பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

13 வயதான அமெரிக்க நடிகை லாரல் கிரிக்சின் திடீர் மரணம் ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்கள், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லாரல் கிரிக்ஸ் (13). இந்த சிறுமியின் நடிப்பாற்றலை பார்த்து ஸ்கார்லெட் ஜான்சென் உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்களே வியந்து பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே நாடக அரங்கில் பல நாடகங்களில் நடித்துள்ளார் லாரல். தனது 6 வயதில் இருந்து அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 5ம் திகதி லாரல் கிரிக்ஸ்க்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விஷயத்தை தற்போது தான் அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர். இதை கேள்விப்பட்டு ஹாலிவுட்டில் சோகம் நிலவுகிறது. லாரல் கிரிக்சின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லாரல் கிரிக்ஸ் மரணமடைந்ததற்கான காரணம் குறித்து தெளிவான விவரங்கள் முதலில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் கடுமையான ஆஸ்துமா பாதிப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பிறந்ததில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை லாரலுக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்