தமிழில் பேசவா? என.... இந்தி மொழியில் பேச சொன்னவரை வாய் அடைக்க வைத்த நடிகை டாப்ஸி: வைரல் வீடியோ

Report Print Basu in பொழுதுபோக்கு

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட நடிகை டாப்ஸி, இந்தி மொழியில் பேசச் சொல்லி வலியுறுத்திய நபருக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்த நடிகை டாப்ஸி பன்னு, பாலிவுட்டில் `பிங்க்', `முல்க்' என இந்தி திரைப்படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானார். தற்போது, இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் 50வது சர்வதேச திரைப்பட திருவிழாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் டெல்லியில் பிறந்த நடிகை டாப்ஸி கலந்து கொண்டார்.

இந்ந நிகழ்வில் டாப்ஸி ஆங்கிலத்தில் கலந்துரையாடிக் கொண்டிருந்து போது திடீரென கூட்டத்தில் இருந்து குரல் எழுப்பிய நபர் ஒருவர் டாப்ஸியை இந்தி மொழியில் பேசக்கூறி வலியுறுத்தினார்.

உடனே, இங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் இந்தி புரியுமா? என டாப்ஸி கேள்வி எழுப்பினார். பலரும் தெரியாது வேண்டாம் எனக்கூறினர். ஆனால், நீங்கள் இந்தி நடிகை அதனால் இந்தியில் தான் பேச வேண்டும் அந்த நபர் மீண்டும் கூறினார்.

இதற்கு பதல் அளளித்த டாப்ஸி, நான் தென்னிந்திய நடிகையும் கூட, அப்படி என்றால் நான் இப்போது தமிழில், தெலுங்கில் பேசவா? என்று கேள்வி எழுப்பினார்.

டாப்ஸியின் பதிலால் அந்த நபர் அமைதியாக, அரங்கமே கைத்தட்டி டாப்ஸின் பதிலுக்கு வரவேற்பு தெரிவித்தனர். தற்போது, டாப்ஸியின் நெத்தடியடி பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்