இலங்கை பெண் லாஸ்லியாவின் காதல் விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்த தந்தை! வெளியான தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழில் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியா இருவரின் காதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் விதித்துள்ள நிபந்தனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக இருந்த இவரை, இப்போது உலகமே அறியும் அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக அமைந்தது பிக்பாஸ் சீசன் 3.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் லாஸ்லியா மிகவும் பிரபலமானார். குறிப்பாக இலங்கையை சேர்ந்தவர், தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதால், அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியது.

ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் கவீனுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக வெறுக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையே அவரை திட்டினார்.

இதனால் இவர்களின் காதலை லாஸ்லியாவின் தந்தை ஏற்கமாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதே போன்று பிக்பாஸ் முடிந்த பின்னும் கவின்-லாஸ்லியா இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அதிக அளவில் பேசி கொள்ளாத்தால், இவர்களின் காதல் முடிவுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கவீன்-லாஸ்லியாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளாராம். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை, இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக லாஸ்லியாவின் தந்தை கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இருவரும் வெளியில் பங்கு பெரும் நிகழ்ச்சியில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்