முதல் திருமணத்தை மறைத்து என்னை மணந்தார்! பிரபல தமிழ் திரைப்பட பாடகர் மகன் மீது பெண் புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் திரைப்பட பாடகரும் கானா பாடல்கள் மூலம் பிரபலமானவருமான பழனியின் மகன் தரணி முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கானா பழனி. இவர் நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் பாடிய மாம்பழம் விக்குற கண்ணம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இவர் பல்வேறு கானா பாடல்களை பாடியுள்ள நிலையில் அவர் மகன் தரணியும் பிரபல கானா பாடகராக உள்ளார்.

இந்நிலையில் தரணிக்கு எதிராக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவரின் மனைவி விஜயபானு கண்ணீருடன் ஒரு புகார் அளித்தார்.

புகாரில், நித்யா என்ற பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ள நிலையில், அதை மறைத்து தன்னை 2ஆவது திருமணம் செய்து கொண்டதாகவும், வரதட்சணையாக 20 சவரன் பெற்றுக் கொண்ட நிலையில், மேலும் 30 சவரன் கேட்டு அடித்து துன்புறுத்துதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்பேரில் பொலிசார் தரணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்