பிரியங்காவின் மரணம்... கொடூரன்களின் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் விவேக் சொன்ன வார்த்தை

Report Print Santhan in பொழுதுபோக்கு

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், நடிகர் விவேக் இந்த சம்பவம் குறித்து கொந்தளித்து பேசியுள்ளார்.

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற 27 வயது மருத்துவ பெண் ஒருவர், நான்கு பேர் கொண்ட நபர்களால பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்த அந்த கொடூரன்கள், அவரை போர்வை ஒன்றினுள் வைத்து, மண்ணெண்ணய்யை ஊற்றி எரித்ததால், கருகிய நிலையில், அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது நாட்டையே உலுக்கியது, இந்தியாவில் தனியாக இருக்கும் பெண்ணின் நிலை இது தானா? என்று திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விவேக், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எத்தனையோ நற்பண்புகள் கொண்ட இளையோர் இருக்க, இப்படியும் சில மிருகங்கள், மன்னிக்கவும், இவர்கள் அதை விட கீழானவர்கள். உயிர் விட்ட சகோதரி ஒரு நாளில் இறந்தார்; ஆனால் இவர்கள் சாகும் வரை தினம் இறப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்