நடுவீட்டில் சிறுநீர் கழிப்பார்! மகளுக்கு பாலியல் தொல்லை- பிரபல நடிகர் குறித்து மனைவி பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் மனைவியும், நடிகையுமான ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ளார்.

பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் பெற்றோர் சம்மதத்துடன் 'வம்சம்' சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது நடிகர் ஈஸ்வருக்கு முதல் திருமணமாக இருந்தாலும், ஜெயஸ்ரீக்கு இரண்டாவது திருமணம்.

இந்நிலையில் கடந்த ஓரிரு தினத்திற்கு முன், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், தன்னுடைய கணவர் ஈஸ்வர், தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மகாலட்சுமியுடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது, அம்மாவுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி அதற்கான அனைத்து ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதன் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வர் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வர் எந்தளவுக்கு மோசமானவர் என்பதை கூறும் விதமாக ஜெயஸ்ரீ ஒரு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், என்னை திருமணம் செய்து கொள்ளும் போது. ஈஸ்வருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.

இந்த காலத்தில் அனைவருக்குமே உள்ள ஒரு சாதாரண பழக்கம் என இதை நான் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. ஆனால், இது நாளுக்கு நாள் அதிகரித்தது. பல முறை அதீத குடியில், ஈஸ்வர் நடு வீட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார், இதனை அவருடைய அம்மா மற்றும் நான் என இருவருமே சுத்தம் செய்துள்ளோம்.

குடித்தால் என்னை அடிக்காமல் அவர் இருந்ததில்லை.

மேலும் ஒரு முறை குடித்து விட்டு, நான் என நினைத்து குழந்தையிடம் கூட தவறாக நடந்து கொண்டார் என கண்ணீருடன் கூறினார்.

மேலும் இது என் மகளை மனரீதியாக பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் என்னை விவாகரத்து செய்ய வேண்டும் என ஈஸ்வர் அடிக்கடி கூறி வருகிறார்.

அதே போல மகாலட்சுமியும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

நான் மகாலட்சுமியை சந்தித்து என் கணவனை விட்டு விடும்படி கெஞ்சினேன், ஆனால் நான் அவளிடம் பேசியதை ஈஸ்வரிடம் கூறினார், இதற்கும் என்னை போட்டு அவர் அடித்தார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்