இரண்டாவது திருமணம்... பாஸ்போர்ட்டை திருடினாள்! மனைவியை பற்றி கூறிய பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர்

Report Print Santhan in பொழுதுபோக்கு
1339Shares

பிரபல சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீ தன்னுடைய கணவருக்கும், வேறொரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், தன்னை சித்ரவதை செய்வதாக புகார் கொடுத்திருந்த நிலையில், அவரின் கணவர் ஈஸ்வர் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஜெயஸ்ரீ-ஈஸ்வர் குடும்ப விவகாரம் தான், ஜெயஸ்ரீ கொடுத்த புகாரால் புழல் சிறையில் அடைக்கப்பட்ட, ஈஸ்வர் நேற்று பிற்பகல் பெயிலில் வெளிவந்தார்.

ஈஸ்வர் குடும்பத்தினருடன்

அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் 2016-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டேன், எனக்கு இது முதல் திருமணம், ஆனால் அவருக்கு இது இரண்டாவது திருமணம்.

அவர் ஒரு குழந்தையோடு தான் வந்தார். அந்த குழந்தையை நான் அன்பாக பார்த்து கொண்டேன். திருமணத்திற்கு பின் நாங்கள் நன்றாக மகிழ்ச்சியாகவே இருந்தோம்.

ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இருவருக்கும் சிறு சிறு பிரச்னை ஏற்பட்டது. இதனால் அவள் தான் விவாகரத்து பற்றி பேசினாள். இதனால் இருவரும் விவாகரத்து என்ற ஒரு முடிவிற்கு வந்தோம். ஆனால் திடீரென்று பார்த்தால், இவ்வளவு பெரிய பழியை என் மேல் தூக்கி போடுகிறாள்.

ஈஸ்வர் மனைவி ஜெய்ஸ்ரீ

நான் அவளை அடித்ததே கிடையாது, அடித்ததாக கூறுகிறாள். நாங்கள் இருவரும் இப்போது இருக்கும் வீடு என் தந்தை எனக்கு கொடுத்தது. இருவரும் தனியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தந்தை கொடுத்தார். அதுமட்டுமின்றி நான் இப்போது வரை அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தும் நானே பார்த்து கொள்கிறேன்.

இந்த பிரச்னையின் துவக்கம், அவள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டியிருந்தது. அதன் காரணமாக அவள் என்னிடம் கேட்ட போது, நான் அவள் என்னுடைய மார்க் சீட் போன்றவைகளை வைத்திருந்தால், அதை என்னிடம் கொடு அல்லது காட்டு, நான் அதை வீடியோவாக எடுத்து கொள்கிறேன் என்று கூறினேன்.

அதன் பின்பு தான் மிகப் பெரிய பிரச்னையாக ஆக்கிவிட்டாள். முதலில் என் அப்பாவிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டும் என்று கூறினாள். பொலிசில் அளித்த புகாரிலோ முதலில் 8 லட்சம் என்று போட்டு அளித்துவிட்டு, அதன் பின் 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாள்.

அது ஏன் எதற்கு? இப்போதே இது தேவையா? என்று அவளிடம் கேட்டேன், ஒன்றும் எனக்கு புரியவில்லை, அப்போது சரி 30 லட்சம் கொடுத்தால் செல்லலாம் இல்லையென்றால் சிறை தான் என்று கூறினாள். அதன் பின் அந்த இரவில் பொலிசார் அங்கும் இங்கும் என்னை அலைய வைத்தனர். நள்ளிரவில் அப்படி அலைந்தேன்.

அதன் பின் என்னை ஒரு நீதிபதியிடம் அழைத்து சென்றனர்.

அதில், என்னுடைய அம்மாவை விட்டுவிட்டனர். என் மீது மட்டும் ஏதே இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நான் எந்த ஒரு கொடுமையும் செய்யவில்லை, அப்போதே என் நண்பர்கள் சொன்னார்கள், அவளை திருமணம் செய்ய வேண்டாம், நீ நடுத் தெருவுக்கு தான் வருவாய் என்று நான் கேட்காமல் திருமணம் செய்துவிட்டேன் இப்போது அனுபவிக்கிறேன்.

மஹாலட்சுமி

அவள் எனக்கு ஒரு நடிகையான மஹாலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவருக்கு எல்லாமே சந்தேகம் தான், மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் என்னையும், மகாலட்சுமியையும் ஒன்றாக ஆடும்படி கூறினர். ஏனெனில் நாங்கள் இருவரும் தற்போது நடித்து வரும் ஒரு சீரியலில் ஜோடியாக நடித்து வருகிறோம், அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

அதன் படியே நாங்கள் நடனம் ஆடினோம், அந்த புகைப்படத்தை கூட நான் என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன், அதுவும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் போடும் படி என்று கேட்டுக் கொண்டதன் பேரிலே பதிவேற்றம் செய்தேன், அதுமட்டுமின்றி என்னுடைய மனைவியை யாரோ பின்னே தூண்டுவிடுகின்றனர்.

அது ஏன் மஹாலட்சுமியின் கணவராக கூட இருக்கலாம், அவர்கள் இருவருக்கும் இடையே எதுவாக இருக்கலாம், என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது, நான் மலேசியா கலைநிகழ்ச்சிக்கு போக கூடாது என்பதற்காக என்னுடைய பாஸ்போர்ட்டை திருடிவிட்டாள், நான் அதன் பின் புது பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்கு சென்றேன் என்று கூறி முடித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்