விஜயகாந்தின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது! மணப்பெண் யார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஸ்மேசர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுடன் அவருக்கு நிச்சயம் ஆனது.

நிச்சயதார்த்த கோலத்தில் விஜயபிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர்

விஜயபிரபாகரன் - கீர்த்தனா திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்