பார்வையற்ற மாணவர்களிடம் நடிகர் விஜய் அலட்சியமாக நடந்து கொண்டதாக புகார்! அது தொடர்பில் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய் படப்பிடிப்பால் இடையூறு நடந்ததா என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியர் சரவண மணிகண்டன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அறிவிக்கை வாயிலாக வெளியிட்டார்.

அதில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தங்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடந்ததாகவும் இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும் பள்ளி வளாகம் என்கிற புரிதல் கூட இல்லாமல், ஆங்காங்கே புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என உங்கள் படக்குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனவும் விஜய்யை சந்திக்க ஆசைப்பட்ட மாணவர்களிடம் கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற என சிலர் மோசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதோடு பார்வையில்லாத குழந்தைகளை காண வேண்டும் என விஜய் நினைக்காமல் அலட்சியப்படுத்தியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த புகாரையடுத்து விஜய் படப்பிடிப்பால் குறித்த பள்ளியில் இடையூறு ஏற்பட்டதா என அந்த பள்ளிக்கூடத்தின் முதல்வரிடம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்.

அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்