சீமானை மீண்டும் எச்சரித்த தமிழ் நடிகர்... கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன் என்று பளீர் பேச்சு

Report Print Santhan in பொழுதுபோக்கு

ரஜினி பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ராகவாலாரன்ஸ் மற்றவர்கள் வேதனை தரும் படி பேசாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை எச்சரித்துள்ளார்.

சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் தர்பார் பட இசை வெளியிட்டு விழாவின் போது, நடிகர் ராகவாலாரன்ஸ், சீமானை மறைமுகமாக பேசினார்.

அந்த விவகாரம் குறித்து சீமானிடம் கேட்ட போது, தம்பி லாரன்ஸ் எந்த நாட்டிற்காக பேசுகிறார் என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேசிய ராகவாலாரன்ஸ், அரசியலுக்கு வரும் அனைவரையும் வரவேற்று பழகுங்கள், அதை விட்டுவிட்டு நான் மட்டுமே தான் இருப்பேன், நான் மட்டுமே தான் என்று பேசினால் அதற்கு பெயர் என்ன?

ஒரு போட்டி என்று இருந்தால், போட்டியாளர் இருக்க வேண்டும், போட்டியாளரே இல்லையென்றால் அதுக்கு பெயர் வெற்றியா? நான் தமிழன் என்று எல்லாம் கூறுகிறீர்கள், நாங்கள் அப்புறம் எங்கிருந்து வருகிறோம், தயவு செய்து மற்றவர் மனது வேதனைபடும் படி பேசாதீங்க சீமான் அண்ணா, எனக்கு இதை எல்லாம் விட கோபம் வரும், நான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு கோடி ரூபாய் கொடுத்ததை பற்றி கணக்கு கேட்கிறீர்களே, அது யாருக்கு கொடுத்தேன் என்று இப்போது சொல்கிறேன்.

அந்த போராடத்தின் போது இறந்த இளைஞனின் குடும்பத்திற்கும், அவர்களின் படிப்பு செலவிற்கும் கொடுத்தேன், போய் வேண்டும் என்றால் கேட்டுக் கோங்க, அதுமட்டுமா கேரளாவில் ஒரு கோடி கொடுத்திருக்கிறேன், இது எல்லாம் எதற்காக ஒரு ரசிகனாக நாங்கள் செய்கிறோம், நீ ஓட்டிற்காக செய்கிறாய், நாங்கள் நாட்டிற்காக செய்கிறோம் என்று கூறி முடித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்