எட்டு ஆண்டுகள்... எப்படி மறப்பேன்: மகளின் பிறந்த நாளில் உருகும் பாடகி சித்ரா

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரபல பாடகி சித்ரா வெளியிட்ட சமூக வலைதள பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரபல பாடகி சித்ரா தமது சமூக வலைதள பக்கத்தில், இன்று உனது பிறந்தநாள் கொண்டாடும் வேளையில், மறக்க முடியாத பல நினைவுகளும் எங்கள் மனங்களில் நிழலாடுகிறது.

உன்னை எவ்வளவு இழந்து தவிக்குறோமோ அந்த அளவுக்கு நேசிக்குறோம். அன்புக்கினிய நந்தனாவுக்கு அங்கே சொர்க்கத்தில் இனிமையான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என சித்ரா குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு சித்ராவுக்கும் கணவர் விஜயசங்கருக்கும் மகளாக பிறந்தார் நந்தனா.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து ஒன்பது வயதான நந்தனா மரணமடைந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...