லண்டனுக்கு போனதற்கு பதிலாக ஈழத்தமிழர்களுக்கு உதவியிருக்கலாமே! விமர்சித்த நபருக்கு பிரபல பாடகரின் பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

லண்டனுக்கு ஜாலியாக போய் வருவதற்கு பதிலாக ஈழத்தமிழர்களுக்கு செலவு செய்யலாமே என நபரின் விமர்சனத்துக்கு தக்க பதிலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் கொடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி பாடகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருந்தனர்.

இதையடுத்து அங்கு தாங்கள் சுற்றிபார்த்த இடங்களின் புகைப்படங்களை செந்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த படத்தைப் பார்த்த ஒருவர், இவ்வளவு செலவு செய்து லண்டன் செல்ல வேண்டுமா?அதற்கு பதில் ஈழத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாமே என்று கேட்டிருந்தார்.

இதற்கு செந்தில் கணேஷ் பதில் கூறியுள்ளார். அதில், லண்டன் பணத்தை பதிவிட்டதில் ஒரு நபர் கேட்டிருக்கிறார். இதற்கு செலவழிப்பதற்கு ஈழத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவலாமே என்று. உங்களைப் போன்றோர் தெரிந்துகொள்ளட்டுமே என்பதற்காகத்தான் இந்த பதிவு.

கிடைத்த வருமானத்தில் ரூ.50 ஆயிரத்தை (இந்திய ரூபாய்) ஈழத்து ஏழைப் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ஈழத்துப் போராளி ஈழவன் எனும் ஈசன் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்த தருணம்.

இது போன்ற செய்திகளை பதிவிட விரும்புவது இல்லை. உங்களைப் போன்றவர்களுக்காக இந்த பதிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்