வைரமுத்து போட்ட டுவிட்! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து வெளியிட்ட டுவிட் வைரலாகி வருகிறது.

தனியார் கல்லூரி சார்பில் வைரமுத்துவுக்கு வழங்கவிருந்த டாக்டர் பட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இருக்கலாம் என்றும், ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியது காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசினர்.

இந்த நிலையில்தான் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்