பிரபல நடிகையுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது! இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹார்திக்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா, செர்பிய மாடல் அழகியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஆல்ரவுண்டராக கிடைத்தவர் ஹார்திக் பாண்ட்யா. பல இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னுடைய அதிரடி பேட்டிங் மற்றும் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

ஆனால், சமீத்தில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் லண்டனில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவரை இந்திய அணியில் பார்க்கலாம் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையில் ஹார்திக் பாண்ட்யாவும், செர்பிய மாடல் அழகியும் நடிகையுமான நடாஷாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின, ஆனால் அது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர்.

இதையடுத்து தற்போது ஹார்திக் பாண்ட்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்திருக்கிறார்.

படகு ஒன்றில் நடாஷாவுக்கு மோதிரம் அணிவிக்கும் வீடியோ ஒன்றையும் ஹர்திக் பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்