அவர் தான் எனது உண்மையான தாயார்: பிரபல பாடகிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

இந்தி திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பாடகியாக கோலோச்சும் அனுராதா பத்வால் தமது தாயார் என்ற உரிமைகோரலுடன் இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் கர்மலா மோடெக்ஸ் என்பவரே இந்த உரிமைகோரலை முன்னெடுத்துள்ளார்.

தமது தாயார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.

அனுராதாவும் அருண் பத்வாலும் கடந்த 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 1974 ஆம் ஆண்டு கர்மலா பிறந்துள்ளார்.

இசை உலகில் அப்போது கொடிக்கட்டிப் பறந்த அனுராதாவுக்கு தமது மகளுக்கு உரிய கவனிப்பை வழங்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தமது குடும்ப நண்பரான கேரள மாநிலத்தை சேர்ந்த பொன்னச்சன் மற்றும் ஆக்னஸ் தம்பதிகளிடம் மகளை ஒப்படைத்தார் என்பதே கர்மலாவின் தற்போதைய வாதம்.

அப்போது ராணுவத்தில் பணியாற்றி வந்த பொன்னச்சனுக்கு கேரளாவில் இடம் மாற்றம் ஏற்படவே, அனுராதா தமது மகளை அழைத்துச் செல்ல வந்துள்ளார்.

ஆனால் மகள் அவருடன் செல்ல மறுத்ததை அடுத்து அனுராதா திரும்பியுள்ளார். பொன்னச்சனின் மூன்று பிள்ளைகளுடன் தாம் வளர்ந்ததாக கூறும் கர்மலா, பொருளாதார நெருக்கடியால் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே பாடசாலை சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னச்சன் மரணப்படுக்கையில் வைத்து தம்மிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும், அபோது முதலே தாம் பாடகி அனுராதாவை சந்திக்க முயன்று வருவதாகவும், ஆனால் அவர் மறுத்து வருவதாகவும் கர்மலா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் தமது இரு பிள்ளைகளும் இச்சம்பவத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என அனுராதா தெரிவித்துள்ளதாக கூறும் கர்மலா,

தமக்கு 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பில் அனுராதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கர்மலா தெரிவித்துள்ளார்.

மேலும், அனுராதாவின் இரு பிள்ளைகளுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக கோரிக்கை வைத்துள்ளதாகவும் கர்மலா தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்