அவருக்கு இரண்டு மனைவிகள்... காலில் விழுந்து கெஞ்சினேன்! பிரபல துணை நடிகை கண்ணீர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

கணவனை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த துணை நடிகை, ஒருவரை திருமணம் செய்து, வாழ்ந்து வந்த நிலையில், அவர் நான் இப்போது நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தின், சென்னை செனாய் நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவில் கடந்த 20-ஆம் திகதி புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில், எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பையன் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறான். 2வது மகன் பள்ளியில் படிக்கிறான்.

சொந்த ஊர் திருச்சி. நான் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறேன். என்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளோடு தனியாக வாழ்ந்துவருகிறேன்.

அழகுநிலையம், அழகு லேசர் கிளினிக்கை சென்னையில் நடத்திவருகிறேன். இதைத் தவிர, சிறுசிறு வேடங்களில் துணை நடிகையாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்துள்ளேன்.

என் தாய் வீட்டு சொத்து பிரிக்கப்பட்டதில் 25 லட்சம் ரூபாய் கிடைத்தது.. ஏற்கெனவே நடத்திவரும் கிளினிக் மூலம் எனக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து வந்தேன். முதல் திருமணத்தின்போது என் பெற்றோர் 100 சவரன் வரதட்சணையாகக் கொடுத்தனர்.

இந்தநிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மான்கராத்தே படத்தில் சிறிய வேடத்தில் நான் நடித்த போது, அந்தப்படத்தில் நடித்த சரவணன் சுப்பிரமணி (42) என்பவர் பஸ்களுக்கு பாடி கட்டும் தனியார் நிறுவனம் நடத்திவருவதாகக் கூறி என்னுடன் அறிமுகமானார்.

அதன் பின் நான் வசிக்கும் வீட்டின் அருகே எதர்ச்சையாக வருவது போன்று அடிக்கடி வந்து சென்றார். அதன் பின் ஒரு நாள் நான் உன்னை விரும்புவதாகவும், உன்னை உன் குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்வேன் என்று கூறினார்.

ஒரு ஆண் துணை இல்லாததால், இவர் நமக்கு பாதுகாப்பாக இருப்பார் என்று அதே ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம், திருமணத்திற்கு அவர் என்னை எங்கும் செல்லக் கூடாது, வீட்டோடு இருக்க வேண்டும் என்று கூறியதால், சினிமா வாய்ப்புகள், கிளினிக்கில் வருமானம் குறைந்தது.

தாய் வீட்டுப் பாகபிரிவினைச் சொத்துப் பணமும் குறைந்தது. அச்சமயம் என் மகன்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் சரவணன் என்னையும் என் குழந்தைகளையும் கொடைக்கானல் பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் சரவணனின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

அவர் குடித்துவிட்டு தன் நண்பர்கள் 3 பேரின் முன்னிலையில் என்னை நடனமாடச் சொன்னார். ஒரு மனைவியை இப்படி நடத்துகிறாரே என்று நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

என் குழந்தைகளும் பயந்து நடுங்கிவிட்டனர். என்னையும் குழந்தைகளையும் பங்களாவை விட்டு வெளியே விடாமல் சித்ரவதை செய்தார். என் வாழ்க்கைக்கு ஒரு ஆண் துணை வேண்டுமென்று விரும்பி மணந்த கணவனால் பெரிய ஆபத்தில் தள்ளப்பட்டோம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். பிறகு நான் எப்படியோ என் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தப்பித்து சென்னை வந்து சேர்ந்தேன்.

அதன் பின் சரவணனின் நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு மிரட்டியதால், மீண்டும் சரவணனுடன் சேர்ந்து வாழ்ந்தேன், முதலில் மன்னிப்பு கேட்டு என்னுடன் வாழ்ந்து வந்த சரவணன், மீண்டும் அவரின் சுயரூபத்தை காட்டினார்.

இதனால் நான் மனமுடைந்து, இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள். நான் எங்காவது என் குழந்தைகளுடன் பிழைத்துக்கொள்கிறேன் என்று எவ்வளவோ அழுது கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை விடாமல் எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன்.

இப்படி ஒரு மனவேதனையில் இருக்கும் போது, சரவணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தைகள் இருப்பதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தேன், அது குறித்து அவரிடம் சண்டை போட்டேன், அவர் எனக்கும் முதல் மனைவிக்கும் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து இருவருக்கும் சண்டை வந்த போதும், அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். வீட்டை காலி செய்துவிட்டு, போன் நம்பரை மாற்றினேன், ஆனால் என் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதை நோட்டமிட்டு, என் வீட்டை கண்டுபிடித்து வந்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னர் அவரது முதல் மனைவிக்கும் இவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் எனக்கு தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மகளும் மகனும் அவருடைய முதல் மனைவிக்கு இருப்பதும், சரவணனுக்கு இரண்டாவதாக இன்னொரு மனைவியும் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது எனவும் எனக்கு தெரிந்தது.

அதன்பின் சரவணனை விட்டு பிரிந்து சுமார் 10 வீடுகளுக்கு மேல் மாறிவிட்டேன். ஆனால் அவர் விடும்படி தெரியவில்லை, கடந்த 2017-ஆம் ஆண்டு சரவணின் முதல் மனைவி என் கிளினிக்கிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தார், அவர் காலில் விழுந்து கெஞ்சினேன், அவரும் என்னை மிரட்டி விட்டு சென்றார்.

ஒரு பக்கம் சரவணனின் அடியாட்கள், இன்னொரு பக்கம் சரவணனின் மனைவியினர் என்னை அடிப்பதும், காரை உடைப்பதுமாக இருப்பதால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன், ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சரவணன் எனக்கு பாலியல் கொடுமை செய்தது மட்டுமன்றி என்னுடைய ஆபாப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கோ என் குழந்தைகளின் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் சரவணனும் அவருடைய அடியாள்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்