பிரபல தொலைக்காட்சி இளம் நடிகை தற்கொலை!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
474Shares

பிரபல தொலைக்காட்சி நடிகை சீஜல் ஷர்மா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்துள்ள சீஜல் மும்பையில் உள்ள வீட்டில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விடயத்தை நடிகரும், அவரின் நண்பருமான அரு வர்மா உறுதி செய்துள்ளார்.

வர்மா கூறுகையில், சீஜல் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது. பத்து நாட்களுக்கு முன்னர் தான் அவரை சந்தித்தேன்.

தான் நலமாக இருப்பதாகவே அவர் என்னிடம் சொன்னார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வாட்ஸ் அப்பில் சீஜலுடன் பேசினேன் என கூறினார்.

மேலும் சீஜல் எனக்கு சகோதரி போன்றவர், அவர் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

சீஜலிலின் உடலை கைப்பற்றியுள்ள பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அதை அனுப்பியுள்ள நிலையில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அவரின் மரணத்துக்கு நண்பர்களும், சக நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்