நித்தியானந்தாவின் வலையில் நடிகை ரஞ்சிதா சிக்கியது எப்படி? ரகசியத்தை உடைத்த திரைப்பிரபலம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நித்தியானந்தாவுக்கு எல்லாமே நடிகை ரஞ்சிதா தான், அவர் கண்ணசைத்தால் போதும் என்று பலரும் கூறி வரும் நிலையில், ரஞ்சிதாவை பற்றி சில தகவல்களை தெலுங்கு திரைப்பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த நித்தியானந்தா, தன்னுடைய ஆன்மிகம் மூலம் உச்சத்திற்கு சென்றார். அப்போது தான் அவருக்கு நடிகை ரஞ்சிதாவுடன் நட்பு கிடைத்தது, அதன் பின் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகின.

இதையடுத்து அடுத்தடுத்து, உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தன்னுடைய ஆசிரமத்தை நிறுவனர், தொண்டு நிறுவனம் மூலம் பணம் பெற்றார். இப்படி இருந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

பண மோசடி, பாலியல் புகார், ஆள் கடத்தில் போன்ற வழக்குகள் உள்ளன. இதன் காரணமாகவே இந்தியாவை விட்டு தப்பி ஓடிய நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒரு குட்டித் தீவை வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும், இதற்கு பிரதமர் நடிகை ரஞ்சிதா தான் என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி ரஞ்சிதாவுக்கு தெரியாமல், நித்தியானந்தா ஆசிரமத்தில் எதுவும் நடக்காது என்று நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து தப்பியவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதா குறித்து தெலுங்கு திரைப் பட எழுத்தாளரனா பரிச்சூரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், என் மகளும் ரஞ்சிதாவும் நல்ல தோழிகள், அவரிடம் நல்ல திறமைகள் இருப்பதை அறிந்த நான் கடப்பா ரெட்டம்மா என்ற திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தேன்.

ஒரு முறை ரஞ்சிதா என்னை சந்தித்த போது நித்யானந்தா அட்டைப் படம் போட்ட புத்தகம் ஒன்றை கொடுத்தார்.

அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக வாங்கிக் கொண்டேன் , நான் அப்போதே அந்த பெண்ணை கண்டித்து இருந்தால் அவர் இந்த நிலைக்கு மாறி இருக்க மாட்டார் . அந்தப் பெண்ணிடம் நல்ல திறமைகள் இருக்கிறது . அவருக்கென்று தனி இடத்தை சினிமாவில் அவர் பெற்றிருக்க முடியும். இன்னும் அவருக்கான இடம் உள்ளது.

அந்தப் பெண் அதிகம் புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர் . சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடை மூன்றடுக்கு வீட்டில் ஒரு மாடியில் முழுவதும் புத்தகங்களை அடுக்கி நூலகமாக மாற்றியுள்ளார் , அவர் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் நித்யானந்தாவின் புத்தகங்களை படித்து தான் அவர்நித்யானந்தா வலையில் விழுந்தார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்