தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்த பிரபல நடிகை காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகை ஜமீலா மாலிக் தனது 73வயது வயதில் காலமானார்.

தமிழில் வெள்ளி ரதம், அதிசய ராகம், லட்சுமி, நதியை தேடி வந்த காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் ஜமீலா மாலிக்.

இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதோடு தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் ஜமீலா நடித்துள்ளார்.

1972-ல் திரையுலகுக்குள் நுழைந்த ஜமீலா தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜமீலா திங்கள் இரவு உயிர்ழந்தார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers