திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக ஈழத்து தர்ஷனுக்கு எதிராக கொந்தளித்த சனம் ஷெட்டி! நீதிமன்றத்தின் தீர்ப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சனம் ஷெட்டி வழக்கில் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த தர்ஷன் மீது, நடிகையும் அவரின் காதலியுமான சனம் ஷெட்டி பரபரப்பு புகார் கொடுத்தார்.

அதில், தனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது எனவும், ஆனால் தன்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டினார்.

இதோடு தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன் என்றும் கூறினார் .

இதற்கு விளக்கமளித்த தர்ஷன், சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் ஒரே அறையில் தங்கினார். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்றார்.

இந்த விடயம் நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷன் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பண மோசடி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தர்ஷன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக சனம் ஷெட்டியின் வழக்கறிஞர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பண மோசடி போன்ற குற்றத்திற்கு தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறியிருந்தார்.

இதனால் தர்ஷன் கைதாக வாய்ப்பிருப்பதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்