சனம் என்னை ஒழிக்க முயன்றார்! காயப்பட்டேன்... அவரை பிரிந்த காரணத்தை கூறிய ஈழத்து தர்ஷன்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சனம் ஷெட்டி தன்னை ஒழிக்க முயன்றார் என கூறியுள்ள தர்ஷன் அவரை பிரிந்ததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும் பொலிசில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார்.

இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

ஆனால் இதை சனம் மறுத்தார். இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கையில், சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விடயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சனை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடரக்கூடாது.

அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...