விவகாரத்திற்க்கு உதவி! ஆபாச மெசேஜ்... பிரபல சீரியல் நடிகை குறித்து நண்பர் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகையுடன் நடந்தது என்ன பிரச்சனை, அவரை அடித்தது உண்மையான என்பது குறித்து ரகளை செய்த இளைஞர் விளக்கமளித்துள்ளார்.

தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் தீபா என்பவர் நடித்து வருகிறார்.

நடிகர் சரத்குமார் நடித்த மாயி படத்தில், வடிவேலு பெண் பார்க்க செல்லும் போது, இவர் பெண்ணாக மின்னல் வேகத்தில் சென்று வருவார். இதனால் அன்று முதல் மின்னல் தீபா என்று பிரபலமானார்

இந்நிலையில் யாரடி நீ மோகனி சீரியலுக்கான ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த ஷுட்டிங் ஸ்பாட்டில் தீபாவை இளைஞர் ஒருவர் அடித்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் இது பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து தீபாவிடம் கேட்ட போது, எனக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தெரிந்து கொண்டு, குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க நினைப்பதாக கூறியிருந்தார்.

இதனால் அவர் கணவர் ரமேஷ், அந்த இளைஞர், மின்னலை ஒரு தலையாக காதலிப்பதாகவும், அதன் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டதாகவும், உடனே அங்கிருந்து எச்சரித்து அனுப்பிவிட்டதாகவும், அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அந்த இளைஞரின் பெயர் சிட்டி எனவும், அவர் அன்று என்ன நடந்தது என்பதை பிரபல இதழான விகடனுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், நான் சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல்களின் பப்களுக்கு செல்லும் பழக்கம் கொண்டவன், அப்படி ஒரு பப்பிற்கு சென்ற போது தான், தீபா எனக்கு அறிமுகமானார்.

இருவரும் மொபைல் நம்பர் பரிமாறிக் கொண்டோம். நண்பர் ஆகினோம், ஒரு கட்டத்தில் தீபா தனக்கும் கணவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை கூறி விவகாரத்து வாங்கி தர முடியுமா? உதவ முடியுமா என்று கேட்டார்.

இதனால் நானும் எனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். இப்படி எங்கள் உறவு நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று என்னிடம் இருந்து விலகினார்.

நானும் சரி என்று அவரிடம் பேசாமல் இருந்தேன். அதன் பின் ஒரு நாள் மீண்டும் என்னிடம் வந்து பேசினார். நீங்கள் பேசவிலை என்றால் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால் அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

அதன் பின், இரண்டு நாள் கழித்து மறுபடியும் என்னைப் பத்தி தப்புத் தப்பா என்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அட்தோடு என்னையும் தவிர்த்தார்.

இதனால் அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதை கேட்பதற்காக அன்று ஷுட்டிங் நடந்த இடத்திற்கு சென்றேன். ஷுட்டிங்கிற்கு வெளியே நின்று அவருடைய போனுக்கு தொடர்பு செய்து கொண்டிருந்தேன், போன் பிசியாகவே இருந்தது.

இதன் காரணமாக அவரை நேரில் பார்த்து பேசலாம் என்று உள்ளே சென்று அவரின் செல்போனை வாங்கி பார்த்த போது, ஒரு நம்பரில் இருந்து ஆபாசமா மெசேஜ்லாம் எல்லாம் வந்திருந்தது.

அது யார் என்று கேட்டதால் வாக்குவாதம் ஆனது, அவங்க சரியான பதிலைச் சொல்லாம, என்னையும் அங்க இருந்து வெளியேறச் சொன்னதால, ஆத்திரப்பட்டு அவங்க போனை உடைச்சேன், அவ்ளோதான். மத்தபடி நான் அவங்களை அடிக்கலை.

ஏதோ கணவனும் மனைவியும் ஒற்றுமையா வாழ்ந்திட்டிருக்கறதாகவும், நடுவுல நான் புகுந்து அவங்க குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதாகவும், அப்பட்டமா பொய் சொல்லியிருக்காங்க என்று கிட்டி கூறியுள்ளார்.

இதே கிட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியதாகவும், இருவரும் காதலித்ததாக கூறி செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்