அந்த முத்தம் எனது அனுமதியின்றி... கமல் தொடர்பில் நடிகை ரேகா வெளியிட்ட சர்ச்சை தகவல்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

புன்னகை மன்னன் திரைப்பட முத்தக் காட்சி தொடர்பில் நடிகை ரேகா வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த திரைப்படத்தில் முக்கிய பாடல் காட்சி ஒன்றில் தம்மிடம் அனுமதி பெறாமலையே கமல் முத்தமிட்டார் என ரேகா தெரிவித்துள்ளார்.

ரேகா வெளியிட்டுள்ள இந்த கருத்து சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல் அனுமதியின்றி முத்தமிட்டார் என்றால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ரேகா தெரிவிக்கையில், அந்த முத்தக் காட்சி எனது அனுமதியின்றி படமாக்கப்பட்டது என்றால், ரசிகர்கள் நம்ப மறுப்பார்கள்.

தற்போது இயக்குநர் பாலச்சந்தரும் உயிருடன் இல்லை, கமலுக்கு மட்டுமே இது தொடர்பில் விளக்கமளிக்க முடியும் என்றார்.

அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, தற்கொலை செய்து கொள்ளும் போது கண்ணை திறந்திருப்பாயா என்று பாலச்சந்தர் என்னிடம் கேட்டார்.

கமல்ஹாசனைப் பார்த்து நான் சொன்னது ஞாபகமிருக்கிறதா என்று பாலச்சந்தர் கேட்டார். நான் கண்ணை மூடி கீழே குதிப்பதற்கு முன் கமல் எனக்கு முத்தமிடுவார். என் அப்பா இதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று கூறினேன்.

படத்தில் பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா, முத்தக் காட்சி ஆபாசமாக இருக்காது என்றார். ஆனாலும் என் அம்மாவிடம் நான் கூறும்போது என்னை ஏமாற்றி முத்தக் காட்சி எடுத்துவிட்டதாகக் கூறினேன்.

ஆனால் அந்தக் காட்சியை திரையரங்கில் பார்க்கும் போது பார்வையாளர்கள் சந்தோஷப்படுகிறார்களா, துக்கப்படுகிறார்களா என்பதை என்னால் உணரமுடியவில்லை. வியப்பாக இருந்தது.

இந்த முத்தக் காட்சி தொடர்பில் பல பேட்டிகளிலும் நான் வெளிப்படையாக பேசியிருந்தேன்.

இதனால் கமலுக்கும் பாலச்சந்தருக்கும் என் மீது கோபம் இருந்தது என்பது உண்மை தான். ஆனால் அந்த உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம் என்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்