நடிகை போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த இளைஞன்! பாலியல் தொழிலுக்கு அழைப்பு.. அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகை காயத்ரி சாயின் செல்போனை டெலிவரி பாய் ஆபாச சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்ததால் அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் அஞ்சலி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை காயத்ரி சாய்.

இவர் சென்னை தேனாம்பேட்டை பொலிசில் ஒரு புகார் அளித்தார்.

அதில், தனக்கு பல்வேறு எண்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும், அனைவரும் ஆபாசமாக பேசி, பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகிய மூன்று நபர்கள் பெயரை கூறியிருந்த நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொலிசார் விசாரித்தனர்.

அதில், ஆபாச வீடியோக்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்வதற்காக, அவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பில் காயத்ரி நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் அதை பதிவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் காயத்ரி கடந்த 9ஆம் திகதி பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அந்த பீட்சாவை பரமேஸ்வரன் என்ற நபர் டெலிவரி செய்வதற்காக, அவருக்கு அடிக்கடி செல்போனில் அழைத்து பேசியுள்ளார்.

டெலிவரி கொடுக்கும் போது போதையில் இருந்த பரமேஸ்வரனுக்கும், காயத்ரிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் காயத்ரி நம்பரை வாட்ஸ் அப் குரூப்பில் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து பரமேஷ்வரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்