கொரோனா அச்சுறுத்தல்: மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன் - நடிகர் வடிவேலு & மானஸ்வி வீடியோ

Report Print Abisha in பொழுதுபோக்கு

அசால்ட்டாக இருக்காதீர்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலர் வெளியில் எப்படி உள்ளது என்று சுற்றிப்பார்க்க சாலைகளுக்கு வருகின்றனர். பலமுறை பொலிசார் அறிவுரை கூறி அனுப்பிய நிலையில் இது தொடர்வதால் பொலிசார் விரட்டி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அதில் நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோவில்

"மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவு பண்ணி எல்லாரும் அரசாங்கம் சொல்ற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காவல்துறையினர் நம்மைக் காவல் காத்து பாதுகாப்பாக இருங்கள், தயவு பண்ணி வெளியே வராதீங்க. யாருக்காகவோ இல்லையோ நம்ம சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீர்கள். அசால்ட்டாக இருக்காதீர்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவு பண்ணி வெளியே வராதீங்க”

இவ்வாறு வடிவேலு கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

மானஸ்வி

தொடர்ந்து இமைக்க நொடிகளில் நடித்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இது குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் படத்தில் பொலிஸ்காரரை மிரட்டுவது போல், பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...