லண்டனில் இருந்து ஊருக்கு திரும்பிய பிரபல பாடகிக்கு ஐந்தாவது முறையாக கொரோனா இருப்பது உறுதி!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை கனிகா கபூரின் 5வது சாம்பிள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதுவும் கொரோனா தொற்று பாசிட்டிவ் என்ற முடிவையே அளித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9-ம் திகதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கொரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான் கனிகா கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் சாம்பிள்கள் சோதனை செய்யப்படும். கனிகா தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக 5வது முறையாக இவருக்கு கொரோனா பாசிட்டிவ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இவர் மருத்துவமனையில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அங்கு வசதிகள் சரியில்லை, கொசுக்கள் இருக்கின்றன என்று புகார் எழுப்ப அதற்கு மருத்துவர்கள் நீங்கள் முதலில் நோயாளி போல் நடந்து கொள்ளுங்கள், பெரிய பிரபலம் என காட்டி கொள்ள வேண்டாம் என கோபத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்